ஏனைய மதத்தை சார்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையான லீவு , ஆலயங்களுக்கு சென்று வழிபட்டுவருவதற்கு 2 மணித்தியாலயங்கள் லீவு வழங்கப்படவேண்டும்

இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய மதத்தை சார்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையான லீவு போன்று இந்து அரச உத்தியோகத்தர்கள் கௌரி விரதம் , மற்றும் கந்தசஷ;டி விரதம் அனுஷ;டிக்கின்றபோதும், வெள்ளிக்கிழமைகளில் ஆலையங்களுக்கு சென்று வழிபட்டுவருவதற்கு 2 மணித்தியாலயங்கள் லீவு வழங்கப்படவேண்டும் . என இந்து ஜனநாயப் பேரவையின்  தேசிய இணைப்பாளர் க.ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலைய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற  இந்து ஜனநாயப் பேரவையின் அங்குரார்பணமும் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பேரவையின் தேசிய இணைப்பாளர் க.ரவீந்திரன், .சு. யோகராஜ் , சா. அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டபோது இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

ஈழமண்ணிலே பல்வேறுபட்ட இந்துமதம் சார்ந்த அமைப்புக்கள் உள்ளன இருந்தாலும் இந்து மதம் சார்ந்தவர்களுடைய அபிலாiஷகளை அல்லது தேவைகளை பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான கோரிக்கைகளை இதுவரை எந்தவொரு அரசியல்வாதிகளிடமே அல்லது தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடம் முன்வைத்ததாக தெரியவில்லை.

எனவே இதன் காரணமாக இந்துக்களுடைய பிரச்சனைகளை அல்லது தேவைகளை கோரிக்கையாக அரசியல் வேட்பாளர்கள்  அரசியல் தலைவர்களுக்கு முன்வைக்கும் நோக்கத்துடன் இந்த இந்து ஜனநாயப் பேரவையானது ஆரம்பிக்கப்பட்டது.

இந்து ஜனநாயப் பேரவையானது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படவுள்ளது இதன் முன்னோடியாக அங்குரார்பண கூட்டம் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்று தீpர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் எதிர்லரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அனைவரிடமும் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றோம். இந்து மக்கள் செறிவாக வாழுகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்டத்துக்கு ஒரு கோரிக்கை என்ற அடிப்படையிலும் தேசிய மட்டத்தில் 3 கோரிக்கைகளையும் முன்வைக்க இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் 3 மாவட்டங்களுக்கு 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன அதில் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பரிவில் இருக்கின்ற கோவில்குளம் என்ற பிரதேசத்தில் உலகநாச்சியார் கட்டியொழுப்பிய ஆலையத்தை சகோதர இனத்தவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர் . அதற்கான அகழ்வாராச்சி கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்றது அதில் ஆலயம் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுதல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எனவே அந்த அகழ்வாராச்சி தொடர்ந்து இடம்பெறவேண்டும். ஆந்த ஆலய நிலப்பரப்பு அகழ்வாராச்சிக்கு உட்படுத்தப்பட்டு அது இந்துக்களுடைய பூமியாக பிரகடணப்படுத்தப்படவேண்டும் என்பது மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கோரிக்கை.

அதேவேளை இப்போது சர்சைக்குள்ளாகியிருக்கும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்பது அம்பாறை மாவட்டத்துக்கான கோரிக்கையாகும் ..

திருகோணமலை மூதூர் தேர்தல் தொகுதியில்  இந்து மக்கள் செறிவாக வாழுகின்ற இடப்பரம்பலைக் கொண்ட அனைத்து இந்துமக்களும் பயன்படுத்தக் கூடிய ஒரு பிரதேச செயலகம், பிரதேச சபையை உருவாக்குதல் திருகோணமலை மாவட்டத்துக்கான கோரிக்கையாகும்.

அதேவேளை தேசிய ரீதியான கோரிக்கையாக ஏனைய மதத்தை சார்ந்த அரச ஊத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையான லீவு போன்று இந்து உத்தியோகத்தர்கள் கௌரி விரதம் மற்றும் கந்தசஷ;டி விரதம் அனுஷ;டிக்கின்ற போது அவர்கள் தமது விரதத்தை ஆனுஷ;டிக்க ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வருவதற்கும் நாள் ஒன்றுக்கு 2 மணித்தியாலங்களும் வெள்ளிக்கிழமைகளில் ஆலையங்களுக்கு சென்று வழிபட்டுவருவதற்கு 2 மணித்தியாலயங்கள் லீவு வேண்டும்.

நாட்டிலுள்ள தாபன விதிக் கோவையில் ஏனைய ஒரு மதத்தினருக்கு அவர்களுடைய மததாபனங்களை பின்பற்றுவதற்கான பல சலுகைககள் வழங்கப்படுகின்றது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் இந்துக்கள் ஆகிய எங்களுக்கு வழங்கப்படவேண்டும் .

ஞாயிறுதினங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை மிக குறைவாக காணப்படுகின்றது அதற்கான காரணமாக அன்றை தினத்தில் தனியார்கல்வி நிலையங்களில் பிரத்Nதியோக வகுப்புக்கள் நடாதத்படுவதே  ஆகவே இந்த ஞாயிறுதினத்தில் பிரத்தியோக வகுப்பு நடாத்தக் கூடாது என்ற சட்டம் ஒன்றை இயற்றி அமுல்படுத்தப்பட வேண்டும்.

இந்து ஜனநாயப் பேரவையின் தொழில்பாடு இந்துக்களுடைய இருப்பை தக்க வைப்பதற்கும் இந்துக்களுடைய உரிமையை பாதுகாப்பதற்கும் தேவையை நிறைவேற்றுவதற்குமான நடவடிக்கைகைகளை மேற்கொள்வதாகவே அமையும் என்றார்.

-tamilcnn.lk

TAGS: