புலிகளின் தாக்குதலில் 90 படையினர் பலி, கோட்டா மட்டுமே மிச்சம்… வெளிவரும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளுடனான போரில் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சென்ற அணியினரை முற்றாகப் புலிகள் அழித்தனர். கோட்டாபய மட்டுமே எஞ்சினார். இந்தத் தாக்குதலில் அதிகாரிகள், படையினர் என 90 பேரை இழந்தோம் என கோட்டாபய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் வரலாற்றைக் கூறும் “கோட்டாபய” நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண எழுதியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு போர் காலத்தில் தப்பி ஓடினார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் அவர் ஒரு முன்மாதிரியான இராணுவத்தினன் என கமால் குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் யாழ்ப்பாணத்தில் நடந்த போரில் இரு படைப் பிரிவுகள் போரிட்டன. அதில் ஒன்றுக்கு கோட்டாபய ராஜபக்ச தலைமை தாங்கினார்.

போரின் போது கோட்டாவின் அணியினரைப் புலிகள் அழித்தார்கள். கோட்டா மட்டுமே தப்பினார். ஆனால், அவர் மீண்டும் மற்றைய படைப்பிரிவுடன் சேர்ந்து போரிட்டார். எனது நினைவு சரியாக இருக்குமானால் அந்தப் போரில் அதிகாரிகள் உட்பட 90 படையினரை நாம் இழந்தோம் என்று கூறியுள்ளார்.

மீண்டும் நாட்டுக்கு திரும்பிய கோட்டாபய முப்படைகளையும் அவர் வலுப்படுத்தினார். இந்த நூல் பல மாதங்களுக்கு முன்னரே எழுதத் தொடங்கி விட்டதாகவும் கோட்டாவின் வரலாற்றை எழுத பலர் கேட்டனர்.

எனினும் அதை எழுதுவதுற்கு தனக்கே அனுமதி கிடைத்ததாகவும் கமால் குணரட்ண தெரிவித்தார். அத்துடன் இந்த நூல் தேர்தலை இலக்காக வைத்து வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.

-athirvu.in

TAGS: