முல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்களை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் குறித்த போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வாறு முல்லைத்தீவு விவகாரம் தொடர்பாக நீதியை நிலைநாட்டவும், செம்மலை பிள்ளையார் கோயில் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-tamilcnn.lk

TAGS: