கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டின் தந்தையார் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா இன்று காலை மணி 8.11க்கு கோட்டா பாரு ராஜா பெரம்புவான் சைனாப் II மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 69.
இந்த வருந்தத் தரும் செய்தியை மந்திரி புசார் அஹமட் யாக்கூப் அறிவித்தார்.
அவரது உடல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு முக்கிய பெருமக்களும் பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக இஸ்தானா பாலாய் புசாரில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். அஸார் தொழுகைக்குப் பின்னர் லங்கார் அரச கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் மறைவையொட்டி ஞாயிற்றுக்கிழமையும் திங்கள்கிழமையும் கிளந்தானில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுவதாக அஹ்மட் அறிவித்தார்.
1980 மார்ச் 30-இலிருந்து 2009 மே வரை கிளந்தானின் 28வது ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் இஸ்மாயில். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரின் புதல்வர் சுல்தான் ஐந்தாம் முகம்மட் 2010 செப்டம்பர் 13-இல் ஆட்சியாளராக பதவியேற்றார்.