தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன் உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கின்றது – என முன்னாள் முதலமைச்சர். வரதராஜபெருமாள்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதனை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். எனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதை கைவிட்ட மாகாண சபையைப் பலப்படுத்த இன்று இப்பொழுதும் பாராளுமன்றத்தில் மாகாண சபை சட்டத்தை திருத்துவதற்கு ஒரு சட்டத்தைக்; கொண்டுவர முடியுமா தமிழ் தேசிய கூட்டமைப்பால் என முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி செயலாலர் நாயகமும் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சருமான வரதராஜபெருமாள்; இவ்வாறு தெரிவித்தார்

சிறிலங்கா பொதுசன பெரமுனை கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கோத்தபாய ராஜபக்சவுக்கு எங்களுடைய கட்சி ஆகிய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆதரிக்கின்றது. மகிந்த ராஜபஷ;ச வேட்பாளரா நியமிக்கும் முன்னார் நாங்கள் யாரை ஆதரிப்பது என முடிவு செய்து ஆதரப்பது என ஆரம்பத்திலிருந்தே அந்த கொள்கையில் அந்த நிலைப்பாட்டில் மாறாமல் இருந்து வருகிறோம்.

இன்றைக்கு எல்லோராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற விடயம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து 65 சதவீத வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக அவர் வருவார் என பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அதேபோல மலையக மக்கள் மத்தியில் இருந்து 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெறுவார்.

முஸ்லீம் மக்களிடம் இருந்து மிக கனிசமான அளவு வாக்குகளை பெறுவார் என்பதுடன் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களும் இன்றைய காலத்தின் தேவையையும் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கருத்தில் எடுத்து மிகப் பெருமளவில் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்றைக்கு எல்லோருhலும் எதிர் பார்கப்படுகின்ற விடயமாக கோத்தபாய ராஜபஷ வின் வெற்றி பார்க்கப்படுகின்றது. அவர் ஜனாதிபதியாகின்ற பொழுது அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலும் ஒரு சில மாதங்களில் வரவிருக்கின்றது மகிந்த ராஜபஷவின் ஆட்சி அமைவதற்கான வாய்புகள் இருக்கின்றது.

2020 ஆண்டு இந்த நாட்டிலே ஒரு உறுதியான அபிவிருத்தியிலே கொண்டு செல்லக் கூடிய ஒரு இஸ்திரமான ஆட்சி அமைய இருக்;கின்றது. வடக்கு கிழக்கை பொறுத்தளவில் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டாகியும். முதலவது 5 ஆண்டு மகிந்த ஆட்சியிலே பல அபிவிருத்திகள உட்கட்டுமான வேலைகள் பெரிய அளவில் இடம்பெற்றன ஆனால் அவருக்கு பின்னர் வந்த நல்லாட்சி என்ற பெயரிலும் கூட்டாட்சி என்ற பெயரிலும் வந்த ஆட்சி புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழர்களுக்கு தருவோம் என்று வாக்குறுதி அளித்து 2016ஆம் ஆண்டுக்குள் வரும் 2017ஆம் ஆண்டுக்குள் வரும் 2018ம் ஆண்டுக்குள் வரும் என்று ஆண்டுகளை கடத்தி கடைசியாக ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.

அதேபோலவே 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள் அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் அக்கறை காட்டவில்லை அவர்களை தாங்கிப்பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி என்பது அடிமைத்தனத்தின் சின்னம் என்று கூறி தமிழ் மக்களின் பிவிருத்தியை பொருளாதார அபிவிருத்தியை பின் தள்ளி விட்டது

கடைசியாக மாதங்களாக மட்டும் கம்பரலி என திட்டத்தின் ஊடாக சில வேலைத்திட்டங்களிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பது தமிழ் மக்களுடைய அபிவிருத்தி தொடர்பான உரிமைகளையும் அபிவிருத்தி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் வேலை வாய்ப்புகள் வீட்டு வசதிகள் பெறுதல்கள்; கூட தமிழ் மக்களுடைய உரிமைகள்.அவற்றையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து நிராகரித்து வந்திருக்கிறது.

எனவே எதிர்வருகின்ற ஆட்சியிலே மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாராளுமன்ற தலைமையிலான ஆட்சியிலும் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பதையும் கொண்டு மிகப் பெரிய அளவிலேயே வடக்கு கிழக்கு மாகாணத்தில் தவறவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எல்லாம் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

காணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய் வழங்கியிருக்கின்றது ஆனால் அந்த பணம் உரியவர்களுக்கு கொடுக்கப்படாமல் அதற்கா நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாதந்தம் பல மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே பிரச்சாரத்துக்காக பலமில்லியன் ரூபா எடுக்கப்பட்டிருக்கின்றது

இப்போது ஒரு மாதம்தான் 6 ஆயிரம் ரூபாய் காணாமல் போன குடும்பங்களுக்கு கொடுப்போம் என்று ஆனால் 5 ஆயிரம் மில்லியன் ரூபாவிலிருந்து பார்க்கிறபோது சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்களை கொடுக்கக்கூடிய ஒரு நிலைமை உள்ளது. எனவே புதிய ஆட்சி வருகிற பொழுது அந்தளவுக்கு நஷ;;ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம். அது தொடர்பாக கரிசனையோடு புதிய அரசாங்கம் இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்

இராணுவ முகாம்கள் தேசிய பாதுகாப்பு என்று செல்லப்பட்டாலும்; அவற்றிற்கு அவசியமில்லாத முகாம்கள் இல்லாமல் செய்யப்படும். ஆந்த இராணுவ முகாங்களுக்காக தமிழ் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் திரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசியல் கைதிகளை விடுவிப்தாக கூறியுள்ளனர். அதுபற்றிய பேச்சு வார்த்தைகளும் நடந்து இருக்கின்றன இவ்வாறான தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு மிக விரைவிலேயே தீர்வுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஜக்கிய தேசிய கட்சியினுடைய வேட்பாளர் 5 வருடம் ஆட்சில் இருந்து எதையும் செய்யாது இப்போது தான் புதிதாக ஆட்சிக்கு வரப் போவது போல வாக்குறுதியை வழங்குவது ஒரு ஏமாற்று தனமான ஒன்று என்று நாங்கள் கருதுகிறோம் அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாச அமைச்சுக்கு கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு நீராவியடி திருகோணமலை கன்னியா பிரச்சினை ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினைகளில் சிங்கள பௌத்த தேசியவாதம் எவ்வளவு தூரம் தலைதூக்கி ஆடி இருக்கின்றது அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சஜித் பிரேமதாச இந்த நாட்டில் இன ஒற்றுமையை கொண்டு வரப் போகிறார் என்று சொல்வதில் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது.

எனவே தமிழ் மக்களை பொறுத்தவரையில் குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மிகப் பெரிய அளவில் அபிவிருத்தி தேவைப்படுகிறது அந்த அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை வருகின்ற கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து அமையப் போகின்ற மஹிந்த ராஜபக்ச தலைமையிலே அமையப் போகின்ற ஆட்சியிலே தான் அவற்றை நடத்தி முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தேசிய கட்சி ஆட்சியில் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளும் கிடைக்க வில்லை அபிவிருத்திகளும் கிடைக்கவில்லை இந்த நிலைமையை மாற்ற வேண்டி இருக்கிறது 2016 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது பெருமளவில் நாங்கள் நம்பிகளும் ஆனால் தமிழ் மக்கள் முழுமையாக ஏமாற்றப்படுகிறார்கள் எனவே தமிழ் மக்கள் அபிவிருத்தியும் இல்லாமல் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் தமிழ் பிரதேசங்கள் இருண்டே காணப்படுகின்றது

இவற்றிலெல்லாம் ஒரு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது ஒரு முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது இவற்றை ஆக்க வேண்டியிருக்கிறது கிழக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை தமிழ் மக்கள் இந்த ஐக்கிய தேசியக் கட்சி உடைய ஆட்சியை மாற்றினால்தான் தமிழ் மக்கள் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியும் தமிழ் மக்களுடைய நிலங்கள் பாதுகாக்கப்பட முடியும் தமிழ் மக்களுடைய கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப்பட முடியும் என நம்புகிறார்கள.
ஆனபடியினாலே கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மிகப் பெரிய அளவில் கோத்தபாய ராஜபக்ஷவின் சின்னமாகிய தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து ஒரு மாற்றத்தை நிகழ்த்தி காட்டப் போகிறார். வருகின்ற கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சி நடத்தும் என்று நாங்கள் நம்புவது மட்டுமல்ல அதற்கான குரல்கொடுப்போம் அதற்கான பேச்சுவார்த்தை நடத்துவோம் உறவுக்கு கைகொடுப்போம் அதேவேளையில் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என்பதை தமிழ் மக்களுக்கு நாங்கள் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

நாங்கள் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைத்த காலம் தொடக்கம் தமிழ் மக்களுடைய உரிமைகளை எந்த காலத்திலும் யாருக்கும் நாங்கள் விட்டுக்கொடுத்ததில்லை அதேவேளையில் தமிழ் மக்களுடைய முன்னேற்றம் ஒன்றே பிரதானமாக இருக்கிறது. யுத்தத்தின் காரணமாக் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மிகவும் பிரதேசங்கள் பின்தங்கி இருக்கிறது

எனவே பெரிய மாற்றங்களை பெரிய முன்னேற்றங்களை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது ஜக்கிய தேசிய கட்சி அதனை செய்யாது என்பதனை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிரூபித்திருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கின்ற எந்த ஆட்சியும் அதனைச் செய்யாது என்று தெரிகின்றது இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பல கட்சிகளின் பிரபலமான தலைவர்கள் மறைமுகமாக கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட எப்படியாவது கோத்தபாய ராஜபக்ஷவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கின்றது அது எதை காட்டுகின்றது என்றால் தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருக்க கூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுக்கு வருகின்ற ஒரு நிலைமை கோத்தபாய ராஜபக்ச அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் பொய்யானவை அர்த்தமற்றவை பொய்யான உண்மையானவை என்பதை விட அவை அர்த்தமற்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரூபிககப் போகின்றது

முஸ்லீம்களை பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக ஒரு கட்சிக்கு சார்பாக போகமாட்டார்கள் அவருடைய 50 வீதம் இந்தப்பக்கம் 50 வீதம் அந்தப்பக்கம் போட்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தங்களுடைய அரசியல் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் அதே புத்தி சாதுர்யத்துடன் தமிழ் மக்களும் செயல்பட வேண்டிய ஒரு தேவை அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதாக இன்றைக்கு இருக்கின்றது

கோத்தபாய ராஜபகஷ; ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது எனவே பிரதமரிடம் கணிசமான அதிகாரங்களை புகை மாற்றப்படுகின்றன எனவே அடுத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் ஒரு முழுமையான அரசாங்கம் இந்த நாட்டு அமைய இருக்கின்றது அவர்கள் சில சில விடயங்களை தாங்களாகவே கூறுகிறார்கள் பொலிஸ் அதிகாரங்களை படிப்படியாக கொடுப்போம். அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் காணாமல் போனவர்களை மிகப்பெரிய அளவிலே நஷ;டஈடுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்கள் நம்ப வேண்டியதாக இருக்கிறது.

ஒன்று கடந்த காலத்திலும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம் மஹிந்த ராஜபக்ஷ; முடியும் என்றால் முடியும் என்று சொன்னாள் செய்வேன் என்று சொன்னால் செய்து காட்டியிருக்கிறார் அதேபோல தன்னால் முடியாது செய்ய முடியாது என்பதையும் அறிய முடியாத விடயங்களையும் முடியாது என்று வெளிப்படையாக சொல்லிக் கொடுத்து ஒரு கட்சியாக கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாங்கள் இருக்கிறோம் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறுவதைத் தவிர மாற்றுவழி இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு அடிப்படையான எதார்த்தமான சாத்தியமான எந்த முயற்சியும் செய்யவில்லை புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவோம் என்று சொல்வதிலேயே அரசியல் தீர்வு வர முடியாது என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே கூறினோம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அதிகாரப் பகிர்வு என்பது மிகப் பிரதானமானது வழங்கப்பட்ட உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாகவும் முறையாகவும் அவற்றை அமல்படுத்த தேவையான சாதாரண சட்டத்தை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு வருவதற்கான முயற்சியை செய்யவில்லை

அரசியல் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதாக இருந்தால் அதற்கு மேலாக சர்வஜன வாக்கெடுப்புக்கு போகவேண்டும் சர்வஜன வாக்கெடுப்பில் தமிழ் மக்களுக்கு சார்பான வாக்குகள் சிங்கள மக்களிடம் இருந்து வரக்கூடிய நிலைமைகள் இன்றைக்கு இல்லை ஆகவே புதிய அரசியல் யாப்புக்கான வாய்ப்புகள் இல்லை அதைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வித்தை

அதற்கு மாறாக 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்தில் ஆம் ஆண்டு மாகாண சிவில் சட்டத்தை மாற்றி அமைத்து ஒரு புதிய அரசியல் சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது இதுவரைக்கும் செய்யவில்லை அடுத்து வருகின்ற காலகட்டங்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் ஆக இருந்தால் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான எல்லா வேலைகளையும் நாங்கள் செய்வோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுதும் நீங்கள் ஏமாற்றாது இப்பொழுது உங்கள் கையிலே வாய்ப்பு இருக்கின்றது நீங்கள் மாகாண சபைத் தேர்தல் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நீங்கள் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு போனீர்கள் அதைவிட முக்கியமானது மாகாண சபைகள் சட்டம் 1986 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைகள் சட்டத்தை திருத்துவதற்கு இப்பொழுதும் பாராளுமன்றத்தில் கொண்டு வரலாம் ஏனென்றால் ஐக்கிய தேசிய கட்சியும் இப்பொழுதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை

எனவே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி கொடுக்கிறது சஜித் பிரேமதாச உண்மையானவராக இருந்தால் இப்போது இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து மாகாண சபையைப் பலப்படுத்த பார்க்கலாம்? எனவே 2016; ஆண்டு 17 ஆம் ஆண்டு 18 அடுத்த பொங்கலுக்கு. தீபாவளிக்கு வரும் என பொய் வாக்குறுதிகளை சொல்லி கடந்த காலங்களை சம்பந்தன் ஜயா ஏமாற்றியது போலவே சஜித் .ரணில் இன்னும் 3 ஆண்டுகள் 5 ஆண்டுகள் தாருங்கள் என இன்னுமொரு 5 ஆண்டுகள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக கேட்டுக் கொண்டிருக்கின்றனா.; அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையாகவே இன்றைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது

அவர்கள் ஏமாற்றுவது தான் அரசியல் என்பது ஓன்றும் புதிதல்ல வெறுமனே வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற தமிழ் மக்களை கைவிட்ட இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமி;ம தேசிய கூட்டமைப்புதான் என்பதனை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும்

 

-tamilcnn.lk

TAGS: