சோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் என்று கூறப்படும் 12 பேரைக் கைது செய்ய 2012 பாதுகாப்புச் சட்டம் (சோஸ்மா) பயன்படுத்தப்பட்டதை மீண்டும் தற்காத்துப் பேசியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்கைது நடவடிக்கை குறித்து போலீசார் தமக்கு விளக்கமளித்திருப்பதாகக் கூறினார்.

அத்துடன், நேற்று பினாங்கு முதலமைச்சர் பி.இராமசாமி எந்தச் சட்டத்தை அகற்றப்போவதாக பக்கத்தான் ஹரப்பான் சூளுரைத்திருந்ததோ அதே சோஸ்மா பயன்படுத்தத்தப்பட்டதைத் தாம் தற்காத்துப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மலேசியாகினியிடம் கூறியிருந்ததற்கும் மகாதிர் எதிர்வினை ஆற்றினார்.

மகாதிரே கடந்த காலத்தில் சோஸ்மாமைக் குறைகூறியுள்ளார் என்பதையும் இராமசாமி சுட்டிக்காட்டினார்.

அதற்கு மகாதிர் இன்று நிலைமை மாறிவிட்டது என்றார்.

“சும்மா யாரையும் கைது செய்வதில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு”, என்றார்.