பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்-முஸ்டபா பில்லா ஷா-வும் பேரரசியார் துங்கு ஹஜ்ஜா அசிசா மைமுனா இஸ்கண்டரியா-வும் நாளை தொடங்கி அக்டோபர் 24வரை ஜப்பானுக்குச் சிறப்பு வருகை மேற்கொள்வதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
மலேசியாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நிலவும் அணுக்கமான உறவுகளை வலுப்படுத்த நோக்கில் அவ்வருகை மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சு ஒர் அறிக்கையில் கூறியது.
அரச தம்பதிகள் நாளை ஜப்பான் சக்கரவர்த்தி நாருஹிட்டோ அரியணை அமரும் சடங்கிலும் கலந்துகொள்லார்கள்.