பினாங்கு மாநில அரசுப் பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

பினாங்கு அரசு அதன் பணியாளர்களுக்கு ஆண்டு இறுதியில் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. குறைந்தது ரிம 1,000 அல்லது மாதச் சம்பளத்தில் பாதி டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

மாநில அரசுப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளனர் என்றும் அதைப் பாராட்டும் நோக்கில்தான் போனஸ் வழங்கப்படுகிறது என்றும் முதலைமைச்சர் செள கொன் இயோ கூறினார்.