மலேசியாவில் உள்ள அகதிகளுக்கு வேலை? அமைச்சரவை முடிவு செய்யும்

மலேசியாவில் அகதிகளாக தங்கியுள்ளவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்களா என்பதை அமைச்சரவை அடுத்த மாத வாக்கில் முடிவு செய்யும் என மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் இன்று மக்களவையில் கூறினார்.

“அவ்விவகாரத்தை விவாதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அது டிசம்பர் 10க்கும் டிசம்பர் 15க்குமிடையில் முடிவு செய்துவிடும் என்று நம்புகிறேன். முடிவு செய்யப்பட்டதும் அது அறிவிக்கப்படும்”, என்றவர் சொன்னதாக த ஸ்டார் கூறியுள்ளது.

விதிமுறைகளில் சில தளர்த்தப்படுவதாக குலசேகரன் கூறினார்.

குலசேகரன் அஹ்மட் தர்மிஸி சுலைமான் (பாஸ்-சிக்) கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவ்வாறு கூறினார். அஹமட் தர்மிஸி, அகதிகள் ஏற்கனவே மலேசியாவில் தங்கி இருப்பதால் அவரை வேலை செய்ய அனுமதிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.