சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானின் முன்னாள் அரசியல் செயலாளர் ஜக்கரியா அப்டுல் ஹமிட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் குறைகூறிய கட்சி உதவித் தலைவர் ஸுரைடா கமருடின் கட்சிக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து வந்திருந்தால் காரணம் தெரிந்து கொண்டிருப்பார். பிகேஆர் தொடர்பு இயக்குனர் ஃபாமி பாட்சில் இதனை இன்று தெரிவித்தார்.
“அவர் வாராந்திர அரசியல் விவகாரப் பிரிவுக் கூட்டங்களிலும் மத்திய தலைவர் மன்றக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும். அங்கு (ஜக்கரியாவுக்கு எதிராக) ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டன”, என்றாரவர்.