சாபா முதலமைச்சர் பதவிக்கு எதிரான மேல்முறையீட்டில் மூசா அமான் தோல்வி

முகம்மட் ஷாபி அப்டால் சாபா முதலமைச்சராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று தான் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் சாபா முதலமைச்சர் மூசா அமான் செய்து கொண்டிருந்த மேல்முறையீட்டை முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

கமர்டின் ஹஷிம், ரோட்ஸரியா பூஜாங், முகம்மட் ஜபிடின் முகம்மட் டியா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு எதிர்த்தரப்பினரின் மனுவை ஏற்று மூசாவின் மேல்முறைறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகளின் தீர்ப்பை வாசித்த கமர்டின், மூசா அமான் முதல் எதிரியான சாபா  யாங்  டி  பெர்துவா  நெகிரி   ஜுஹார் முஹார்டினுக்கு ரிம20,000-உம் இரண்டாவது எதிரியான முகம்மட் ஷாபிக்கு ரிம80,000- உம் செலவுத் தொகையாகக் கொடுக்கும்படியும் உத்தரவிட்டார்.