மசீச அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மற்ற இனத்தவரும் சேர்த்துக்கொள்ளப்படுவர்- வீ

மசீச மற்ற இனத்தவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக அதன் அமைப்புவிதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று கட்சித் தலைவர் வீ கா சியோங் கூறினார். .

இன்று காலை மசீச-வின் 66வது ஆண்டுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்த வீ, கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இணை உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்து வந்துள்ளது என்றார்.

“மசீச என்றால் சீனர்களுடையது என்பது பிரபலமாகி விட்டாலும் அதன் கதவுகள் எல்லாருக்கும் திறந்திருக்கிறது, எல்லாருடைய நலனுக்காகத்தான் அது பாடுபடுகிறது”, என்றாரவர்.