பிரதமர்: சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு இல்லை

சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு விசா விலக்கு குறித்து மறுஆய்வு செய்ய எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறினார்.

நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 15 நாள் விசா விலக்கு அளிப்பதை மறுபரிசீலனை செய்ய புத்ராஜயாவுக்கு எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.

“தற்போது எந்த திட்டமும் இல்லை, ஆனால் இங்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும், குறிப்பாக சீனாவிலிருந்து வருபவர்களையும் நாங்கள் கண்கானித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கோலாலம்பூரில் இன்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.