கொரோனா வைரஸ்: நோய்வாய்ப்பட்ட குழந்தை ஜோகூர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்த பெற்றோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஜோகூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் | தனிமைப்படுத்திய கண்கானிப்பு சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்த கொரோனா வைரஸ் பாதிப்புகுள்ளாகியுள்ளதென சந்தேகிக்கப்படும் இரண்டு வயது குழந்தை, மற்றும் அதன் பெற்றோர்களை நேற்று இரவு ஜோகூரில், போலீசாரால் தடுத்து வைத்தனர்.

வுஹானில் இருந்து வந்த அந்த குடும்பத்தினர் சீனாவின் குவாங்சோவுக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் கமாருதீன் எம்.டி தின் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.