டாக்டர் மகாதீர்: நான் இன்னும் 22 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்…

டாக்டர் மகாதீர்: நான் 22 ஆண்டுகள் ஆட்சிசெய்ய வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள்…

நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்)/Asia-Pacific Economic Cooperation (Apec) summit மாநாட்டிற்குப் பிறகு தான், பதவி விலகுவதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்று 138 எம்.பி.க்களின் விரும்புகிறார்கள் என்ற கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், அவர் இன்னும் இரண்டு தசாப்தங்கள் நீடிக்க வேண்டும் என்று சிலர் விரும்புவதாக கேள்விப்பட்டதாகக் கூறினார்.

“எனக்கு வயது 94, சில மாதங்களில் நான் 95 வயதாகிவிடுவேன். மனா பொலே தஹான்? Mana boleh tahan? (இவ்வளவு நேரம் நான் எப்படி தாக்குப்பிடிப்பேன்?)” என்று அவர் இன்று லங்காவியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஏபெக் உச்சிமாநாட்டிற்குப் பிறகு பதவி விலகுவதாக நான் உறுதியளித்தேன். நான் எனது வாக்குறுதியைக் கடைப்பிடிப்பேன். நான் ‘எந்த ஒரு நடவடிக்கைகளிலும்’ ஈடுபடவில்லை,” என்று அவர் கூறினார்.

“மற்ற நடவடிக்கைகள்” தன்னை ஆதரிக்க எம்.பி.க்களை தூண்டிவிடும் முயற்சியை குறிக்கிறது என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

அடுத்த வெள்ளிக்கிழமை நடைபெறும் பக்காத்தான் ஹராப்பன் தலைமைக் குழு கூட்டத்தில் மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான அதிகார மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.