இலங்கை பார்லி., கலைப்பு

கொழும்பு: இலங்கை பார்லிமென்டை கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்று இரவு திடீரென உத்தரவிட்டார்.அண்டை நாடான இலங்கைக்கு கடந்த, 2015ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.

அந்த ஆண்டு செப்., 1ல் அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பார்லிமென்டை திடீரென கலைத்து, நேற்று இரவு உத்தரவிட்டார்.இதற்கான அரசாணையில், நேற்று இரவு அவர் கையெழுத்திட்டார். இந்த அரசாணை, அமைச்சரவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.இதையடுத்து, இலங்கையில், ஏப்ரல்,25ல் பார்லிமென்ட் தேர்தல்நடைபெறும் என்றும், மே, 14ல், முதல் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும், 12 முதல், 19 தேதி வரை நடைபெறுகிறது.

dinamalar