மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள்; மொத்தம் 50-ஆக உயர்வு

மலேசியாவில் 14 கோவிட்-19 பாதிப்புகள், மொத்தம் 50-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் | மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இது இப்போது 50 ஆக பதிவாகியுள்ளது.

மார்ச் 3ம் தேதி ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இதுவாகும்.

புதிய பாதிப்புகளில் பெரும்பாலானவை, 26-ம் நோயாளியினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

26-ம் தொற்று நோயாளி, கஸானா நேஷனல் பெர்ஹாட் (Khazanah Nasional Berhad) மற்றும் ஊடா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (UDA Holdings Berhad) மூத்த உறுப்பினராக அடையாளம் காணப்பட்டது.