கோவிட்-19: 106 புதிய பாதிப்புகள், மொத்த பாதிப்புகள் 1,624, 15 இறப்புகள்

மலேசியாவில் இன்று கோவிட்-19 புதிய 106 வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 1,624 பாதிப்புகள் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பு 10 நாட்களில் மிகக் குறைந்த பதிவாகும். நேற்று, மலேசியாவில் 212 பாதிப்புகள் பதிவாகின. இது ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.

இன்று ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டு, இறப்பு எண்ணிக்கையை 15 ஆக உயர்த்தியுள்ளது.