கோவிட்-19: மலேசியாவில் 17-வது மரணம் பதிவு செய்யப்பட்டது

கோவிட்-19: மலேசியாவில் 17-வது மரணம் பதிவு செய்யப்பட்டது

மற்றொரு கோவிட்-19 மரணம் இன்று மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மொத்தம் 17 பேருக்கு உயர்த்தியுள்ளது.

பல நோய்களின் வரலாற்றைக் கொண்ட 66 வயதான நோயாளி இப்போது பலியாகியுள்ளார்.

‘நோயாளி 1,251’ என அடையாளங்காணப்பட்ட இவர், மார்ச் 20 அன்று மோசமான நிலையில் முவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 4.10 மணிக்கு அவர் காலமானார். இவரின் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்படுகிறது.