கோவிட்-19: இறப்பு எண்ணிக்கை இப்போது 23, மொத்தம் 2,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள்

கோவிட்-19: இறப்பு எண்ணிக்கை இப்போது 23, மொத்தம் 2,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள்

கோவிட்-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 235 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,031 ஆக உயர்ந்துள்ளது.

235 புதிய தொற்றுநோய்களில், 60 தப்லிக் கூட்டத்தோடு தொடர்புடையவை. மீதமுள்ள 175 பேருக்கு நோய்த்தொற்றின் ஆதாரம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 22வது மரணம் “நோயாளி 1797” என்று அறிவித்தார். 48 வயதான அந்நபர் நீண்டகால நோய் வரலாற்றைக் கொண்டவர்.

அவர் குளுவாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், அங்கு அவர் மார்ச் 23 அன்று இரவு 8 மணிக்கு இறந்தார். அவர் தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார்.

23வது மரணம் “நோயாளி 1840”, கஜாங்கைச் சேர்ந்த 62 வயதான நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளது. இவரும் நீண்டகால நோய் வரலாறு உடையவர்.

ஈப்போ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று மதியம் 12.37 மணிக்கு காலமானார். அவரது தொற்றுநோய்க்கான ஆதாரம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

நூர் ஹிஷாம் அறிவித்த உயிரிழப்புகளில், நேற்றிரவு இறந்த “நோயாளி 780” மற்றும் இன்று காலை இறந்த “நோயாளி 1,588” ஆகியோரும் அடங்குவர்.