சிம்பாங் ரெங்காமில் PKPD ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஜோகூர் சிம்பாங் ரெங்காமில் உள்ள இரண்டு நகரங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (PKPD) ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், “இன்னும் சில பிரச்சினைகளை” தீர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சிம்பாங் ரெங்காமில் உள்ள பி.கே.பி.டி. நாளை முடிவடைய உள்ளது.

இதற்கிடையில், ரெம்பாவில் பி.கே.பி.டி. தொடரப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து, இஸ்மாயில் சப்ரி இது சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் அமையும் என்றார்.

ரெம்பாவ் பகுதி ஸ்ரீ பெட்டாலிங் கிளஸ்டரின் துணைக்குழுவாக கருதப்படுகிறது.