மைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலை மைதானங்களில் குழு விளையாட்டுகளில், இன்று (28) மாலை ஈடுபட்ட இளைஞர்கள், விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு எச்சரிக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர்.

முற்றவெளி, மெக்கெய்சர், கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானங்களில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்தாட்டம் விளையாடிய நூற்றுக்கணக்கானோர் எச்சரிக்கபட்டனர்.

“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கும் அவசர தேவைகளுக்குமே தவிர, குழுவாகச் செயற்படுவதற்கு அல்ல. உடற்பயிற்சி தேவைதான். அதைத் தனியாக செயற்படுத்த முடியும்” என, அதிரடிப்படையினர், இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, விளையாட்டு உபகரணங்களை மீள எடுத்துச்செல்ல மறுத்த படையினர், இளைஞர்களின் வேண்டுகோளின் பின்னர் அவற்றை அனுமதித்துள்ளனர்.

TamilMirror