தெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும் இலங்கை மாணவர்கள்

தெற்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கை மாணவர்களை மீட்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக கடந்த 10 நாட்களில் 1065 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான 9 விமானங்கள் மூலம் இந்த மாணவர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து அழைத்துவரப்படும் மாணவர்கள் குறித்து கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு பேசியது.

’’இலங்கைக்கு அழைத்து வரப்படும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதன் பின்னரே நாட்டிற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்’’ என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

BBC