சென்னை சென்ற விசேட விமானம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று இன்று (12) காலை சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

சென்னையில் சிக்கியுள்ள 305  இலங்கையர்களை அழைத்து வருவதற்காக யு.எல் 1121 என்ற விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலை 7.25 மணியளவில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இன்று(12) மு.ப 11 மணியளவில் மீண்டும் இலங்கையை வந்தடையவுள்ளது.

Tamilmirror