’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’

கொரோனா வைரஸால் தொழில்வாய்ப்பை இழந்து, பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வந்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கும், அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கொழும்பிலிருந்து வந்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுள்ள ஜனாதிபதி, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதியின் செயலணிக்கு இது தொடர்பில் கடிதத்தை உத்தியோகப்பூர்வமாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, அஅமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன், இது தொடர்பான கடிதத்தைச் செயலணிக்கு அனுப்பியுள்ளார் என்றும் அதன் பிரதிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பா.நிரோஸ்

TamilMirror