அமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..? ரணில் – சஜித் வியூகம் குறித்தும் பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று -13- ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது.

18 அமைச்சரவைப் பத்திரங்கள் மட்டுமே இருந்தபடியால் அமைச்சரவைக் கூட்டம் நீண்ட நேரம் நடக்கவில்லை.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான நாட்டின் நிலைமையை விளக்கினார் சுகாதார அமைச்சர் பவித்ரா.

பின்னர் நாட்டின் மதுபானசாலைகளை திறப்பது குறித்து விடுக்கப்படும் கோரிக்கைகள் பற்றி சிலர் சுட்டிக்காட்டினர் . அதற்குப் பதிலளித்த பிரதமர் மஹிந்த, அவற்றை படிப்படியாக செய்யவேண்டும் என்று குறிப்பிட்டதுடன் ஒரேயடியாக திறந்துவிட முடியாதென தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும இங்கு விளக்கமளித்தார்.

‘ஏனைய துறைகளை ஆரம்பிப்பது போல கல்வித்துறையை ஆரம்பிக்கமுடியாது. மாணவர்களும் பெற்றோர்களும் ஒருவித அச்ச சூழ்நிலையில் உள்ளனர். எனவே அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சுகாதார பாதுகாப்பு

முன்னேற்பாடுகளை விரைவில் செய்வேன்..’ என்றார் அமைச்சர் டலஸ்.

இதன் பின்னர் தேர்தல் தொடர்பில் பேச்சு வந்தது..

‘கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக தேர்தலை பிற்போடலாமென முன்னர் கூறிய எதிர்க்கட்சி இப்போது பழைய பாராளுமன்றத்தை மீண்டும்

கூட்ட வலியுறுத்துகின்றனர்.

இந்த நிலைமையை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.’

என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

அதேசமயம் அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள்

பலர், தேர்தலை இழுத்தடிக்க வைத்துவிட்டு குறிப்பிட்ட காலத் தின் பின்னர் வேட்புமனுக்களை புதிதாக தாக்கல் செய்யும் நிலைமையை உருவாக்கி ரணிலும் சஜித்தும் இணைந்து தேர்தலொன்றுக்கு செல்வது பற்றிய வியூகத்தை எதிர்க்கட்சி வகுப்பதாக குறிப்பிட்டனர்.

இதன்போது சில புள்ளிவிபரங்களுடன் தகவல் களை முன்வைத்த கல்வியமைச்சர் டலஸ், ரணில் சஜித் அணிகள் தனியாக பிரிந்து தேர்தலுக்கு செல்வதால் அரசுக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.

jaffnamuslim