9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும் இல்லை

இன்று பிற்பகல் நிலவரப்படி 9 புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 9,103 பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

அந்த எண்ணிக்கையில், ஐந்து மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள், அவை ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவை ஆகும்.

உள்ளூர் பரவலில் நான்கு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களை உள்ளடக்கியது ஆகும். புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் மூன்று பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் மற்றொரு பாதிப்பு குயின் எலிசபெத் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது ஆகும்.

“மலேசியர்களிடையே உள்நாட்டு பரவல் தொடர்பான பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை” என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதற்கிடையில், மேலும் ஆறு நோயாளிகள் குணமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 8,809 ஆகும்.

மொத்தம் 169 செயலில் உள்ள பாதிப்புகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, இறப்பு எண்ணிக்கை 125 ஆகவே உள்ளது.

சிவகங்கா மற்றும் குராவ் திரளைகளில் இன்று புதிய பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

மதியம் நிலவரப்படி சிவகங்கா திரளையில், மொத்தம் 5,645 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45 நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

குராவ் திரளையில், பேராக் மற்றும் பினாங்கைச் சேர்ந்த 180 பேர் சோதிக்கப்பட்டுள்ளனர். 5 நேர்மறை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 52 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்