கோவிட் 19 : இன்று 3 மரணங்கள், 589 புதிய தொற்றுகள் பதிவானது

இன்று மதியம் 12 மணி வரையில், நாட்டில் 589 புதிய தொற்றுகள் பதிவாகிய நிலையில், 3 பேர் உயிர் இழந்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார்.

சபா தொடர்ந்து 304 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், சிலாங்கூர் 150 பாதிப்புகளுடன் அடுத்த நிலையிலும் உள்ளன. பேராக்கில் 50 தொற்றுகள் இன்று பதிவாகியுள்ளன.

இதுவரை நாட்டில் 18,129 தொற்றுகளும், 170 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இன்றைய கோவிட் -19 தொற்றின் சுருக்கம் :

குணப்படுத்தப்பட்ட பாதிப்புகள் = 409

மரணங்கள் = 3

அவசரப் பிரிவில் = 103 பேர்

சுவாசக் கருவி உதவியுடன் = 31 பேர்