அஸ்ரஃப் : `பெர்சத்து இல்லை என்றால் அம்னோவை நிராகரிப்போம்’, பாஸ்-சின் பேச்சுக்கு இடமில்லை

அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ரஃப் வாஜ்டி துசுகி, தேசிய முன்னணி தலைமைச்செயலாளர் அன்னுவார் மூசாவின் குற்றச்சாட்டை விவரித்தார், அம்னோவும் பெர்சத்துவும் நட்புடன் இருக்க வேண்டும் என்று பாஸ் வலியுறுத்தியது “தவறானது” என்று கூறியுள்ளார்.

“கடந்த புதன்கிழமை, தேசிய ஒற்றுமை (Muafakat Nasional) ஆலோசனைக் குழுவின் முடிவில், பூமிபுத்ரா, மாலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அம்னோவும் பாஸ்-உம் எனும் ஒருமித்த கருத்துக்கு கையெழுத்திட பாஸ் ஒப்புக்கொண்டது.

“ஆக, பெர்சத்து இல்லாமல் அம்னோவுடனான ஒத்துழைப்பை விரும்பவில்லை” என்று பாஸ் சொல்கிறது என்பதற்கு இடமே இல்லை,” என்று அஸ்ரஃப் நேற்றிரவு சமூக ஊடகத்தில் விளக்கினார்.

இருப்பினும், அஸ்ரஃப்பின் அறிக்கைக்கு மாறாக, கடந்த புதன்கிழமை நடந்த தேசிய ஒற்றுமை கூட்டத்தில் பாஸ் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியதாக அன்னுவார் சொன்னார்.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் டிஏபி-யுடனான ஒத்துழைப்பை நிராகரிக்கும் முயற்சியில், பெர்சத்துவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற முடிவு கட்சியின் கூட்டு முடிவு என்று அன்னுவார் கூறியிருக்கிறார்.