பந்தை எடுக்கச்சென்ற மாணவனை, துப்பாக்கியால் சுட்ட வைத்தியர் கைது

வீட்டுத்தோட்டத்துக்குள் சென்ற பந்தை எடுக்கச் சென்ற மாணவனை வைத்தியர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பன்னிபிட்டிய- எரவ்வல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த ,17 வயதான மாணவனொருவன் எறிந்த பந்து,  அருகிலிருந்த தோட்டமொன்றுக்குச் சென்றதால், அதை எடுக்கச் சென்ற மாணவனை நோக்கி வாயு ரைபிளில் நபரொருவர் சுட்டுள்ளார்.

இதில் காயமடைந்த  குறித்த மாணவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாணவனை துப்பாக்கியால்சுட்ட நபர், மஹரகம அபெக்ஸா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் என்றும் இவர், மஹரகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட வைத்தியர் இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

jaffnamuslim