கடந்த இரண்டு வாரங்களாக, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஒரு பழமையான பயணத்திற்காக, படகு சவாரிக்காக பினாங்குக்கு வருகிறார்கள்.
சுமார் 126 ஆண்டுகளாக உள்ள பினாங்குப் படகுச் சேவை மாநிலத்தின் ஓர் அடையாளமாகும். படகில் நீங்கள் எண்ணற்ற முறை சவாரி செய்திருந்தாலும், படகில் ஏறி தீவுக்குச் செல்லும்போது, கடல் தென்றலையும், கண்களைக் கவரும் காட்சிகளையும் காணும் அந்த உற்சாகம் இன்னும் அப்படியே இருக்கிறது.
பினாங்கு மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மலேசியர்களுக்கும், பல நினைவுகளை உருவாக்கிய அந்தப் பண்டையப் படகு சவாரியிலிருந்து இன்று நாம் விடைபெறுகிறோம்.