தேசிய முன்னணியின் (பி.என்.) தலைமைச் செயலாளர் பதிவியிலிருந்து அன்னுவார் மூசா நீக்கப்பட்டார்.
சற்று முன்னர், இத்தகவலை அம்னோவின் மூத்தத் தலைவர் ஒருவர் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தினார்.
அவருக்குப் பதிலாக, அம்னோ மற்றும் முவஃபாகாட் நேஷனல் பொதுச்செயலாளரான அஹ்மத் மஸ்லான் நியமிக்கப்படுவார் என்று மற்றொரு ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியது.
ஆதாரங்களின்படி, இன்று காலை, கோலாலம்பூரில் உள்ள தலைமையகத்தில், அம்னோ அதன் பிரிவுத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், தேசியக் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியான அம்னோவின் உணர்வுகள் வேறுபட்டிருக்கும்போது, அக்கூட்டணியின் மீது அன்னுவார் அதிக விருப்பம் கொண்டவராகக் காணப்படுகிறார்.
மலேசியாகினி அன்னுவரைத் தொடர்பு கொண்டு, அவரது பதிலுக்காக காத்திருக்கிறது.