தேசியக் கூட்டணி (பி.என்.) 14 மாநிலங்களுக்கும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கும் தலைவர்களை நியமித்துள்ளது.
இது பி.என்.-இன் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் பாரம்பரியமாக, ஒரு கூட்டணியின் மாநிலத் தலைவர், பொதுவாக மந்திரி பெசார் அல்லது முதலமைச்சருக்கான வேட்பாளரைக் குறிக்கும். நியமிக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே மாநிலத்தின் உயர்ப் பதவியை வகிக்கின்றனர்.
புள்ளிவிவரங்களின் படி, 10 பெர்சத்து தலைவர்களும் 4 பாஸ் தலைவர்களும் மாநிலங்கள், கூட்டரசுப் பிரதேசங்களுக்குத் தலைமையேற்பர்.
பெர்சத்து
- ஜொகூர் – முஹிடின் யாசின்
- சிலாங்கூர் – அஸ்மின் அலி
- பேராக் – அஹ்மட் ஃபைஸால் அஜுமு
- சபா – ஹஜிஜி நூர் (மாநில முதல்வர்)
- • பஹாங் – சைபுதீன் அப்துல்லா
- • நெகிரி செம்பிலான் – எடின் சியாஸ்லீ ஷித்
- • பினாங்கு – ஷாபுதீன் யஹாயா
- • மலாக்கா – மொஹமட் ரஃபீக் நைஸாமோஹிதீன்
- • சரவாக் – ஜஸிரி அல்காஃப் அப்டில்லா சுஃபியன்
- • கூட்டரசு பிரதேசங்கள் – முஹம்மது சுஹைமி யஹ்யா
பாஸ்
- திரெங்கானு – அஹ்மத் சம்சூரி மொக்தார் (மந்திரி பெசார்)
- கிளந்தான் – அஹ்மத் யாக்கோப் (மந்திரி பெசார்)
- கெடா – முஹம்மது சனுசி முஹம்மட் நோர் (மந்திரி பெசார்)
- பெர்லிஸ் – மொஹமட் சுக்ரி ரம்லி
தேசியக் கூட்டணி (பி.என்.) – பெர்சத்து, பாஸ், பார்ட்டி சோலிடரிட்டி தனா ஆயேர்கு ரக்யாட் சபா (ஸ்டார்) மற்றும் சபா முற்போக்குக் கட்சி (எஸ்.எ.பி.பி.) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணியாகும்.