இன்று நள்ளிரவு தொடங்கி, ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே லிட்டருக்கு ஐந்து சென்னும், டீசலின் விலை லிட்டருக்கு மூன்று சென்னும் உயர்ந்து, ஒரு வார காலத்திற்கு, ஜனவரி 22 வரை அமலில் இருக்கும்.
நிதி அமைச்சின் அறிக்கையின்படி, ரோன்95 பெட்ரோலின் புதிய சில்லறை விலை லிட்டருக்கு RM1.89 ஆகவும், ரோன்97 பெட்ரோலுக்கான புதிய விலை லிட்டருக்கு RM2.19 ஆகவும் உள்ளது.
“டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.02-லிருந்து RM2.05 ஆக உயரும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
- பெர்னாமா