இன்று 1,280 புதிய நோய்த்தொற்றுகள், 9 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,280 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய நேர்வுகளில் 71.9 விழுக்காடு மலேசியர்கள் சார்ந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கில் 45.8 விழுக்காடு, ஜொகூரில் 12.9 விழுக்காடு, சரவாக்கில் 12.7 விழுக்காடு புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.

இன்று ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன. இன்றைய இறப்புகளில் 35.16 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்ந்துள்ளன. நாட்டின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 1,186 ஆக உள்ளது.

இன்று 2,345 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில்76 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மலாக்கா மற்றும் லாபுவானில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (464), ஜொகூர் (165), சரவாக் (163), பினாங்கு (143), கோலாலம்பூர் (119), சபா (64), நெகிரி செம்பிலான் (45), திரெங்கானு (36), பேராக் (34), கெடா (25), மலாக்கா (20), கிளந்தான் (16), புத்ராஜெயா (3), பஹாங் (2), பெர்லிஸ் (1).

இன்று 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 6 பணியிடம் சார்ந்தவை.