கடந்தாண்டு அக்டோபர் 23 முதல், மலேசிய பி.ஆர்.1எம்.ஏ. கார்ப்பரேஷன் (பிரிமா -PR1MA) தலைவராக ஷாஹிடான் காசிம் நியமிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுபடுத்தியது.
நேற்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான அவரை, பிரதமர் முஹைதீன் யாசின் அதிகாரப்பூர்வமாக நியந்த்ததாக பிரிமா அறிவித்தது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிரிமா தலைமையகத்திற்கு நேற்று விஜயம் செய்தபோது, ஷாஹிடானை பிரிமா தலைவராக நியமிப்பதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஜுரைடா கமருதீன் அறிவித்தார்.
அந்நிகழ்ச்சியில், மலேசிய வீட்டுக் கழகத்தின் தலைவராக ஷாஹிடானை நேற்று (மார்ச் 9) முதல் அமல்படுத்துவதாகவும் ஜுரைடா அறிவித்தார்.
- பெர்னாமா