1,063 புதிய தொற்றுகள், இந்த ஆண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கை

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,063 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று மூன்று மாநிலங்களில் மட்டுமே அதிகரிப்பு உள்ளது என தனது கீச்சகத்தில் பதிவு செய்துள்ளார்.

அம்மூன்று மாநிலங்கள், சிலாங்கூர் (323), சரவாக் (183) மற்றும் பினாங்கு 175 என்று அவர் கூறினார்.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

ஜொகூர் (91), கோலாலம்பூர் (86), கிளந்தான் (67), சபா (38), கெடா (32), பேராக் (24), திரெங்கானு (23), நெகிரி செம்பிலான் (17), பஹாங் (2) ), லாபுவான் (1) மற்றும் மலாக்கா (1).

இன்று புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் புதிய தொற்றுகள் இல்லை.

இதற்கிடையே, 1,365 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் இன்று 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 68 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.