கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,360 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிலாங்கூரில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சரவாக்கில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று 1,491 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 72 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இதற்கிடையே, இன்று சிபுவில் 2 மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆக, நாட்டில் இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 1,248-ஆக உயர்ந்துள்ளது.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (356), சரவாக் (308), ஜொகூர் (129), பினாங்கு (113), கோலாலம்பூர் (98), பேராக் (71), சபா (70), கிளாந்தான் (63), நெகிரி செம்பிலான் (49), கெடா (44), மலாக்கா (32), பஹாங் (10), புத்ராஜெயா (8), திரெங்கானு (6), லாபுவான் (3).