அம்னோவின் பின்னால் உள்ள ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும், தேசியக் கூட்டணி (பி.என்.) பக்கம் ஈர்க்க, பெர்சத்து இரகசியமாக முயற்சிப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறினார்.
“பி.என். அரசாங்கத்தை நாங்கள் ஒன்றாக உருவாக்கினோம், ஒரு கட்டத்தில் அவர்கள் ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் தங்கள் பக்கம் இழுக்கின்றனர்.
“ம.இ.கா.வைப் பி.என்.னுக்கு ஈர்ப்பது … எங்களுக்குத் தெரியும், பொதுமக்களுக்கும் தெரியும்… இந்தச் செயல்பாட்டில் கொஞ்சம் தவறு நடந்திருக்கலாம், மஇகா விலகியது.
“ம.சீ.ச.வைப் பல முறை, பி.என்.னுக்குள் நுழைய இரண்டு அல்லது மூன்று முறை தூண்டியுள்ளதாக நான் நினைக்கிறேன்,” என்று ஃபாட்ஜ்மெல் ஃபாட்ஸில் கூறினார்.