கேலியால் விளைந்த சண்டை : எட்டு பேர் கைது

நேற்று அதிகாலை, ரவாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த சண்டை சம்பவ விசாரணைக்கு உதவ, 8 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

23 முதல் 29 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களில் நால்வர், சாட்சியம் அளிக்க கோம்பாக் காவல் நிலையத்திற்கு வந்தபோது தடுத்து வைக்கப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் அதே காவல்நிலையத்தில் சரணடைந்ததாகவும் கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

“விசாரணைக்கு உதவ இன்னும் பலரை நாங்கள் தேடி வருகிறோம்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 1 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில், 29 வயதான பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்களுடன் ரவாங்கில் உள்ள ஓர் உணவகத்தில் அருந்தி கொண்டிருந்தபோது, அங்கிருந்த இன்னொரு குழுவினருடன், கேலி பேச்சின் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது.

புகார்தாரரின் கை மற்றும் மார்பில் இலேசான காயம் ஏற்பட்டது, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்களை, அருகிலுள்ள காவல் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அரிஃபாய் கேட்டுக்கொண்டார்.

ரவாங்கில், ஓர் உணவகத்தின் முன், சில ஆண்களுக்கிடையே நடந்த சண்டையைக் காட்டும், 47 வினாடிகள் மற்றும் 17 வினாடிகள் நீடிக்கும் இரண்டு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Ketua Polis Daerah Kajang Mohd Zaid Hassan berkata individu berkenaan dikenali sebagai Yuen Wai Lam, 26 yang beralamat di No 3, Jalan Penghulu 12/3, Bandar Mahkota Cheras.

இதற்கிடையே, ஏப்ரல் 9-ஆம் தேதி காஜாங், டாமாய் பெர்டானாவில் உள்ள ஓர் உணவகத்தின் முன் நடந்த கைகலப்பு விசாரணைக்கு உதவ போலீசார் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

காஜாங் காவல்துறைத் தலைவர், மொஹமட் ஸைட் ஹாசன், அந்த நபர் செராஸ்-ஐ சேர்ந்த, 26 வயதான யுவன் வாய் லாம் என அடையாளம் கூறினார்.

முன்னதாக, 19 முதல் 28 வயதுடைய நான்கு பேரை காவல்துறையினர் தடுத்து வைத்திருப்பதாகவும், கலவரத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148-ன் கீழ் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மொஹமட் ஸைட் கூறினார்.

  • பெர்னாமா