காவல் நிலையத்தில் மேலும் ஒரு மரணம்,  திறந்த விசாரணை தேவை – மு. குலசேகரன்

கணபதி என்பவர் காவல் துறையினரால்  துன்புறுத்தப்பட்டு மரணமடைந்தார் என்கின்ற குற்றச்சாட்டு நம் மனதைவிட்டு மறையும்  முன்னரே இன்னொரு மரணச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

42 வயது நிரம்பிய சிவபாலன் சுப்ரமணியம் என்னும் ஒரு பாதுகாவலர் கோம்பாக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் இறந்துவிட்டர் என்கின்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மரணத்தில்  சந்தேகத்திற்குரிய அம்சங்களும் முரண்பாடுகளும் உள்ளதால் உடனடியாக இதனை முழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

சிவபாலன் மரணமுற்றதாகக் போலீசாரல்  கூறப்படும் நேரமும் ,பின்பு அவரின் மரண நேரத்தை அவரின் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்திய நேரமும் வேறுபடுவதால் இந்த  உடனடி விசாரணை அவசியமாகிறது.மேலும் ஒரு செய்தி அவர் காவல் நிலையத்தில் இறந்தார் என்றும் மற்றொன்று அவர்  செலாயாங் மருத்துவ மனையில் இறந்தார் என்றும் கூறுகிறது

இந்த தவறான தகவல் பரிமாற்றம் கடுமையான ஒன்றாதலலால் இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்

மரணச் செய்தியயை அறிவிக்க ஏன் போலீசார் அதிக நேரம் எடுத்துகொண்டார்கள் என்பதனையும் காவல் துறை விளக்க வேண்டும்.

அடிக்கடி இது போன்ற மரணச் சம்பவங்கள் நிகழ்வதாலும் , இது  எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாலும்  இந்த விசாரணக்கான தேவையை இது மேலும் வலுவடையச் செய்கிறது.

கணபதி, சிவபாலன் இருவருக்குமான வெளிப்படையான விசரணையை , மரண விசாரணை நீதிபதி முன் குற்றவியல் நடைமுறைச் விதிச் சட்டத்தின் (Criminal Procedure Code) கீழ் வழி நடத்த வேண்டும் .

அதிகமான  உயிர்ச் சேதங்கள் காவல் நிலையங்களில் நடப்பதால்,பொது மக்கள் காவல் துறையின் மீதான அவநம்பிக்கையை களைய   இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

இப்படி உடனடியாக  எடுக்க தவறினால் நாளடைவில் , காவல் நிலயத்தில் நிகழும் மரணச்சம்பவங்கள் தவிர்க்கமுடியதா ஒன்றெனவும் அது சாதரணமாக நடப்பவையாகும்   என்ற பயங்க்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.இது தொடரக் கூடாதது மட்டுமல்ல , இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் முற்றாக தவிர்க்கபட வேண்டிய ஒன்று.

இவற்றிற்கெல்லாம் பதில் கூறக் கடமைப் பட்டிருக்கும் புதிதாக  பதவிய ஏற்றியுள்ள  தலைமை காவல் துறை அதிகாரியான டத்தோ ஸ்ரீ அக்ரில் சானி அப்துல் சானி ஏன் இன்னும் மௌனம் காக்கிறார்?

அதிகாரிகளை நெறிமுறைப்படுத்தி  காவல் நிலயங்களில் இனி மரணங்கள் ஏதும் நிகழாது என்ற உறுதி மொழியை டத்தோ ஸ்ரீ அக்ரில் சானி அப்துல் சானி வழங்க முன்வருவாரா?

காவல் துறை எதிர் நோக்கும் முக்கிய சவாலாக இந்த மரணங்கள் இருக்கின்றன. இது களையப்படாத வரையில், காவல் துறை விசாரணை என்ற பெயரால் அழைக்கப்படும் எந்த ஒரு நபருக்கும்  மரணம் நிச்சயம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள்.

இந்த பயம்  ஒவ்வொரு மலேசியருக்கும் இப்பொழுது  வந்துவிட்டது.

மு.குலசேகரன், ஈப்போ பாராட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.