இன்று 7,857 புதிய நேர்வுகள் , 59 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் கோவிட் -19 பரவல் சிறந்த அறிகுறிகளைக் காட்டவில்லை. இன்று 7,857 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது அந்நோய்த் தொற்றின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும்.

கடந்த 14 நாட்களாக, சராசரி தினசரி நேர்வுகள் 5,778 -ஆகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று 59 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,491 பேர் பலியாகியுள்ளனர்.

சிலாங்கூர் (19) அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து சரவாக் (9), ஜொகூர் (7), கோலாலம்பூர் (6), கிளந்தான் (5), நெகிரி செம்பிலான் (4), பினாங்கு (3), கெடா (2), சபா (1), மலாக்கா (1), பேராக் (1), திரெங்கானு (1) எனப் பதிவாகியுள்ளன.

இன்று 4,598 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 392 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (2,675), சரவாக் (772), கிளந்தான் (754), கோலாலம்பூர் (561), ஜொகூர் (549), கெடா (441), பினாங்கு (365), நெகிரி செம்பிலான் (353), திரெங்கானு (282), பஹாங் (238), மலாக்கா (234), பேராக் (228), சபா (217), லாபுவான் (170), புத்ராஜெயா (12), பெர்லிஸ் (6).

மேலும் இன்று, 20 புதியத்  திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் 8 சமூகம் சார்ந்த, 7 பணியிடத் திரளைகளும் அடங்கும்.