மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்

ரஷியாவில் தீ விபத்து ஏற்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் குழாய் வழியாக துணிச்சலுடன் ஏறி மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர்.

மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்

குழாய் வழியாக ஏறிய மூன்று பேரை படத்தில் காணலாம்

ரஷியாவில் தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில் ஜன்னல் வழியே அபயக் குரலைக் கேட்ட துணிச்சல் மிக்க மூவர் குழாய் வழியே ஒருவர் பின் ஒருவராக ஏறி நின்று கொண்டனர்.

ஜன்னல் வழியே ஒவ்வொரு குழந்தையாக வாங்கிக் கீழே நின்ற அடுத்தவரிடம் கொடுக்க அவர் மற்றொருவரிடம் கொடுக்கத் தரையில் நின்றவர்கள் குழ்ந்தைகளை வாங்கிக் கொண்டனர்.  இவ்வாறு இரண்டு குழந்தைகளை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

maalaimalar