தற்போதைய தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) பல வகை வரி செலுத்துவோருக்கான வரி வருமான படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
எல்.எச்.டி.என். இன்று ஓர் அறிக்கையில், இது வரி செலுத்துவோருக்கு ஒரு தளர்வு மற்றும் வரி ஆவணங்கள் மற்றும் எல்.எச்.டி.என்.-க்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தகவல்களைத் தயாரிப்பதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கொடுப்பதற்காக என்றது.
“சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோர் மற்றும் தனிநபர் கூடுதல் கால அவகாசம், கூட்டாண்மை, நிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் இந்து இணைந்த குடும்பங்கள் (Keluarga Sekutu Hindu – இந்தியாவில் இருக்கும் ஒரு சட்ட அமைப்பில் கூட்டு மரபுரிமையில் வணிகத்தை நடத்துதல்), 2020 மதிப்பீட்டு ஆண்டிற்கான பிரிவுகள், வரி வருமானப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கும் மற்றும் வரி செலுத்துதற்கும் ஆகஸ்ட் 31 வரையில் வழங்கப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.கே.பி. 3.0 காலகட்டத்தில் வரி விவகாரங்களுடன் வரி வருவாய் படிவத்தைச் சமர்ப்பிப்பது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை எல்.எச்.டி.என்.-யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் காணலாம்.
2021-ஆம் ஆண்டிற்கான படிவம் தாக்கல் திட்டத்தை www.hasil.gov.my > Borang > Program Memfail Borang Nyata Bagi Tahun 2021; அல்லது விரைவான இணைப்பு ProgramMemfailBN_2021_Pin.3_1.pdf (hasil.gov.my) பெறலாம்.
“பிகேபி 3.0 வரி செலுத்துதல் விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அறிய, http://www.hasil.gov.my/pdf/pdfam/faq_pkp3_1.pdf என்ற மலாய் பதிப்பிற்குச் செல்லாம், அதே நேரத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கு https://www.hasil.gov.my/pdf/pdfam/faq_pkp3_2.pdf தளத்தை நாடலாம்.
மேலும் ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருப்பின், எல்.எச்.டி.என்,-இன் ஹசில் கேர் லைன் (Hasil Care Line) மூலம் 03-8911 1000 / 603-8911 1100 (வெளிநாடு), ஹசில் லைவ் சேட் (HASiL Live Chat) மற்றும் எல்.எச்.டி.என்.-இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உள்ள கருத்து படிவத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை https://maklumbalaspelanggan.hasil.gov.my/MaklumBalas/ms-MY/ என்ற விரைவு இணைப்பின் வழி சமர்ப்பிக்கலாம்.
- பெர்னாமா