கோவிட் 19 | இன்று நாட்டில், 6,437 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், இன்று 107 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,108 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்று, 5,298 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 905 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 455 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (2,299), கோலாலம்பூர் (1,361), நெகிரி செம்பிலான் (700), கெடா (284), ஜொகூர் (271), மலாக்கா (252), பஹாங் (250), சரவாக் (242), பேராக் (184), சபா (178), கிளந்தான் (131), லாபுவான் (117), பினாங்கு (115), புத்ராஜெயா (32), திரெங்கானு (21).
மேலும் இன்று, 13 சமூகத் திரளைகளோடு, 12 பணியிடங்களையும் உள்ளடக்கிய 27 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.