கோவிட் 19 | இன்று நாட்டில், 6,387 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிலாங்கூரில் மட்டும் மொத்தம் 2,610 புதிய நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலாங்கூரில், தொடர்ந்து ஏழாவது நாளாக 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன.
மேலும், இன்று 77 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,574 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்று, 4,532 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 433 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (2,610), கோலாலம்பூர் (819), நெகிரி செம்பிலான் (523), சரவாக் (424), ஜொகூர் (324), பஹாங் (312), கெடா (273), சபா (263), பேராக் (249), மலாக்கா (206), பினாங்கு (157), கிளந்தான் (114), லாபுவான் (71), புத்ராஜெயா (25), திரெங்கானு (17).
மேலும் இன்று, 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 11 பணியிடத் திரளைகள் ஆகும்.