பெஜுவாங் கட்சிக்கு முறையான பதிவு கிடைத்துள்ளது என்று பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
“பெஜுவாங் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். ஓர் அரசியல் கட்சியாக, பெஜுவாங் கட்சியைப் பதிவு செய்த அரசாங்கத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நாங்கள் பிரச்சினைகளை ஏற்படுத்த விரும்பவில்லை, எதையும் சட்டத்தின் மூலம் செய்ய விரும்புகிறோம்.
“எங்களைப் பதிவு செய்ய முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
“எனவே இறுதியாக, பெஜுவாங் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது, பெஜுவாங்கில் சேர விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், விண்ணப்பிக்கலாம், இதற்குப் பிறகு நாங்கள் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்,” என்று அவர் இன்று ஓர் இயங்கலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.