கோவிட் 19 | இன்று நாட்டில், 11,618 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, 5 இலக்கங்களில், 11,000-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகின்றது.
மேலும், இன்று 118 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6.503 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்று, 6,377 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 432 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
தீவிரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 9.6 விழுக்காடு குறைந்துள்ளது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (5,051), கோலாலம்பூர் (1,749), நெகிரி செம்பிலான் (1,537), மலாக்கா (526), கெடா (504), பஹாங் (400), ஜொகூர் (396), சரவாக் (289), சபா (286), கிளந்தான் (236), பினாங்கு (210), திரெங்கானு (189), பேராக் (164), புத்ராஜெயா (40), லாபுவான் (38), பெர்லிஸ் (3).