கோவிட் 19 | இன்று நாட்டில், 12,541 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தொடர்ந்து 4 நாட்களாக, நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி வருகின்றன.
மேலும், இன்று 115 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 6,728 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்று, 6,742 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 459 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (5,512), நெகிரி செம்பிலான் (1,619), கோலாலம்பூர் (1,542), ஜொகூர் (609), மலாக்கா (575), கெடா (458), சரவாக் (423), பஹாங் (382), பினாங்கு (376), சபா (326), பேராக் (299), கிளந்தான் (225), திரெங்கானு (102), புத்ராஜெயா (62), லாபுவான் (24), பெர்லிஸ் (7).
மேலும் இன்று, 37 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 19 பணியிடத் திரளைகள் ஆகும்.