கடந்த 24 மணி நேர நேரத்தில், 19,819 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இன்று 257 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 9,855 -ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 12,704 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 553 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (8,377), கோலாலம்பூர் (2,467), கெடா (1,371), ஜொகூர் (1,162), கிளந்தான் (1,003), சபா (949), பினாங்கு (867), நெகிரி செம்பிலான் (800), பேராக் (662), பகாங் (558), சரவாக் (552), மலாக்கா (508), திரெங்கானு (481), புத்ராஜெயா (46), பெர்லிஸ் (11), லாபுவான் (5).
மேலும் இன்று, 35 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 13 கிளந்தானில் பதிவாகியுள்ளன.